தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பேருந்து நிலையம் முன்பு ஏஐடிசி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் பாலமுருகன் தலைமையில் கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் 6000 ஆக வழங்க வேண்டும், கல்வி செலவு முழுவதும் வாரியம் மூலம் வழங்க வேண்டும், வீடு கட்ட மானியம் 10 லட்சம் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.