ஜனவரி 14, 15 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க கட்டிடத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிகின்ற 250 க்கும் மேற்பட்ட அனைத்து சமூகத்தை சார்ந்த ஊரக வளர்ச்சித் துறையினர் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சி பொங்க கோஷமிட்டு சூரியனுக்கு பொங்கல் தேங்காய் பழம் கரும்பு ஆகியவகளை படையலிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடினர்