வடமதுரை அருகே உள்ள வேல்வார்கோட்டை பிரிவு, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் தனது வீட்டின் வெளியே அவர் வளர்த்த ஆட்டுக்கிடாய் ஒன்றைக் கட்டி வைத்திருந்தார். ஸ்கூட்டியில் வந்த திண்டுக்கல் ஆர்.வி.எஸ் நகர் பகுதியைச் சேர்ந்த வினோத், கிழக்கு கோவிந்தாபுரத்தை சேர்ந்த அஸ்கர் மீரான் ஆகிய இருவரும் ஆட்டு கிடாயை திருடி ஸ்கூட்டியில் ஏற்றிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர். இது குறித்து சுப்பையா வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வினோத், அஸ்கர் மீரான் ஆகிய இருவரையும் வடமதுரை போலீசார் கைது செய்தனர்.