தூத்துக்குடி: 18 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆட்சியரகம் முன்பு
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் களப்பணியாளர்க ளின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும் உள்ளிட்ட உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் காளிராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நில அளவை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினார்கள்.