திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் மீது மூன்று கொலை வழக்கு உட்பட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளது. சி கே சி எம் காலனியில் உள்ள வீட்டிற்கு திண்டுக்கல் நகர் டி எஸ் பி கார்த்திக் தலைமையில் போலீசார் சென்றனர். மேலும் வீட்டில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து எஸ்.ஐ ஜான்சனை இடது கையில் வெட்டி உள்ளான். அப்பொழுது டிஎஸ்பி கார்த்திக் தற்காப்புக்காக தனது துப்பாக்கியால் விக்னேஸ்வரனின் வலது காலில் முட்டியில் சுட்டுள்ளார்.