ஆண்டிமடம்: தவெக மாநாட்டிற்கு சென்றுவிட்டு திரும்பும் போது விபரீதம் - புதுக்குடி கிராம வாலிபர் சாலை விபத்தில் உயிரிழப்பு
மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பங்கேற்ற அரியலூர் மாவட்டம் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஜெயசூர்யா உயிரிழப்பு. மாநாட்டில் பங்கேற்று இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது திருச்சி அருகே நடைபெற்ற விபத்தில் சிக்கி, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.