அருப்புக்கோட்டை: பாளையம்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக அமைச்சர் வாக்கு சேகரிப்பு
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருடன் இணைந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தார். அப்போது பாளையம்பட்டி விரிவாக்க பகுதியில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பாளையம்பட்டியில் குடிநீர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என பேசினார்.