வேடசந்தூர் அருகே உள்ள எஸ் ஆர் எஸ் வேளாண்மை கல்லூரி மாணவிகளின் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுக்கோட்டை சி எஸ் ஐ தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் நடுவது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மரம் நடுவதன் மூலம் சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாத்து எதிர்கால தலைமுறைக்கு பசுமையான பூமியை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நிழல் தரும் மரங்கள் பழ மரங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த மர வகைகள் நடவு செய்யப்பட்டது.