திருச்செந்தூர்: சுப்பிரமணியசாமி திருக்கோவில் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும் இடம் சமன்படுத்தும் பணிகள் தீவிரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி விழா வருகிற அக்டோபர் மாதம் 22ம் தேதி தொடங்க உள்ளது. அதன் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா அக்டோபர் 27 ஆம் தேதி கோவில் முன்புள்ள கடற்கரையில் மாலை 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருவார்கள்.