அருப்புக்கோட்டை: பட்டாபிராமர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு
அருப்புக்கோட்டையில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பட்டாபிராமர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். சிறிய குறுகலான வீதிகளை கூட விடாமல் ஒவ்வொரு வீதியாக சென்று இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கேஸ் விலை ரூபாய் 500 ஆக குறைக்கப்படும் என கூறி கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.