தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்துள்ள தேரிகுடியிருப்பு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட கனிமவளத்துறை அறக்கட்டளை சார்பில் சுமார் 34 லட்சத்தி 65 ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது இந்த புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.