தூத்துக்குடி தாளமுத்து நகர் சிலுவைப்பட்டியை சேர்ந்தவர் சேசுராஜா மாப்பிள்ளை யூரணி ஊராட்சி ஒன்றிய திமுக செயலாளராக செயல்பட்டதுடன், மேலும் ரியல் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 13/ 5 /2015 ஆம் ஆண்டு இரவு டேவிஸ் புரம் பகுதியைச் சேர்ந்த டிரைவராக வேலை பார்க்கும் மாரி செல்வம் என்பவரது வீட்டில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவை திருடு போயுள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இந்த நகை திருட்டில் ஈடுபட்டது திமுக ஊராட்சி ஒன்றிய செயலாளர் சேசு ராஜாவின் மகன் அலெக்ஸ் என்பது தெரியவந்தது.