ஆர் புதுக்கோட்டை கிராமம் தாதமுத்தா நாயக்கனூரில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மாடு வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது. இதனை அடுத்து கிராம மக்கள் கோப்பாநாயக்கர் மந்தையில் கோவில் மாட்டிற்கு கிராம மக்களின் சார்பிலும் மற்றும் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த மந்தையின் சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் உறுமி மேளம் முழங்க ஆண்கள் தேவராட்டம் ஆடி, பெண்கள் சாலி பாடல்கள் பாடி கம்பு, கொழுக்கட்டைகள், கரும்புகள், வாழைப்பழங்கள் படைத்து அலங்கரிக்கப்பட்ட கோவில் மாட்டின் முன்பாக அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.