பழனி: பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில்குமார் துவக்கி வைத்தார்
பழனி பகுதிகளில் பழைய பேருந்துகள் செல்லும் வழித்தடங்களில் புதிய பேருந்துகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இன்று பழனியில் இருந்து தாதநாயக்கன்பட்டி பெத்தநாயக்கன்பட்டி தேக்கந்தோட்டம் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு அந்த வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தை சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.