கொடைரோடு அருகே, காமலாபுரம் பிரிவில், பழனியில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து சுமார் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து செம்பட்டி சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையில் செல்ல முயன்ற போது, சென்னையிலிருந்து மதுரைக்கு துவரம் பருப்பு 300 மூடைகளை ஏற்றி சென்ற லாரி மோதியது. இந்த விபத்தில் லாரி சாலை ஓரம் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால், லாரியில் இருந்த 300 மூடைகள் சாலை ஓரம் சிதறியது. லாரி ஓட்டுநர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர், இந்த விபத்தால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்படது