ஓட்டப்பிடாரம்: திமுக கூட்டணி உடையும் பல கட்சிகள் வெளியேறும் புதியம்புத்தூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ தெரிவித்தார்
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட புதியம்புத்தூரில் உள்ள 47 பூத் கிளைக் கழக நிர்வாகிகளை ஆன்லைனில் ஒருங்கிணைத்து அவர்களுக்கு பயிற்சி பட்டறை வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளரும், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மோகன் ஏற்பாட்டில் நடைபெற்றது.