கூடலூர்: அத்திப்பாளி ஸ்கூல் பகுதியில் காலை உலா வந்த காட்டு யானை
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அத்திப்பாளி ஸ்கூல் பகுதியில் இன்று காலை 08.30 மணியளவில் காட்டு யானை ஒன்று உலா வந்தது. இதனால் அப்பகுதியினர் அச்சமடைந்தனர். இரவு நேரங்களில் மட்டுமல்லாமல் பகல் நேரங்களிலும் காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் சாலைகளில் உலா வருவதால் அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை அடைந்துள்ளனர்