தஞ்சாவூர்: எம்பி தொகுதி நிதியில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை : தஞ்சாவூர் அருகே வல்லத்தில் திறப்பு
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேரூராட்சியில் தஞ்சாவூர் எம்பி தொகுதி நிதியில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. இதை திருவையாறு எம் எல் ஏ துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் எம் பி ச .முரசொலி ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம், வல்லம் பேரூர் கழக செயலாளர் கல்யாணசுந்தரம், பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் ராஜசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.