திருவிடைமருதூர்: ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள் முக்தி அடைந்தார், இன்று மாலை குருமூர்த்தத்தில் நல்லடக்கம்
சைவ ஆதீனங்களில் ஒன்றானதாக விளங்கும் திருப்பனந்தாள் காசி திருமடத்தின் 21வது அதிபரான ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் பரிபூரணமடைந்தார். இன்று மாலை திருப்பனந்தாளல் உள்ள குருமூர்த்தத்தில் நல்லடக்கம் நடைபெறுகிறது.. திருப்பனந்தாள் காசி திருமணத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.