ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் எதிரான தீவிர தேடுதலில் குமணன் சாவடி பழைய தீயணைப்பு நிலையம் அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பெயரில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் சுபாஷினி தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ராகுல் என்பவர் நின்று கொண்டிருந்தார் அவரிடம் 10 கிலோ கஞ்சா இருந்தது இதனை அடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.