தூத்துக்குடி: உலகம் முழுவதும் அமைதி ஏற்படுத்த இளைஞர்களுக்கு பயிற்சி விமான நிலையத்தில் ரோட்டரி சங்க நிர்வாகி ஸ்ரீதர் ஜெகநாதன் பேட்டி
சென்னை ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட ஆளுநரும் சென்னை ரோட்டரி சங்க நிர்வாகியுமான ஸ்ரீதர் ஜெகநாதன் நெல்லையில் நடைபெறும் ரோட்டரி சங்க விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவருக்கு நெல்லை ரோட்டரி சங்க நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.