பழனி: ஒட்டனைபுதூர் செல்லும் அரசு பேருந்து மேற்கூரை பெயர்ந்து மழை நீர் விழுவதால் பஸ்ஸில் நனைந்தபடியே செல்லும் பயணிகள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலையிலிருந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்பொழுது பழனியில் இருந்து ஒட்டனைபுதூர் செல்லும் அரசு பேருந்து மேற்கூரை பெயர்ந்து மழை நீர் பெய்தபடியே பயணிகள் நனைந்தபடியே செல்வதால் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதை பயணி ஒருவர் அவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகினர்.