திருவள்ளூர்: கொப்பூரில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற மாணவன் மாயம் தொண்டு நிறுவன கண்காணிப்பாளர் போலீசில் புகார்
திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் குப்பத்தில் உள்ளது நம்பிக்கை இல்லம் என்ற தொண்டு நிறுவனத்தில் தங்கியிருக்கும் மாணவர்   கொப்பூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஜோஸ்வா டேனியேல் ராஜ் (14), என்ற சிறுவன் புத்தகப் பையை பள்ளியில் வைத்துவிட்டு  காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நம்பிக்கை இல்ல கண்காணிப்பாளர் அருண் மணவாளநகர் போலிசில்  இன்று காலை புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.