தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஆஸ்பத்திரி சாலையில் சங்கர் என்பவர் இருசக்கர வாகனம் ஓட்டி செல்லும் போது நாய் மீது ஏற்றியுள்ளார். இதில் கீழே விழுந்த அவரை மீட்டு அருகில் இருந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் சங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இது தொடர்பாக கயத்தாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.