தஞ்சாவூர்: உலக வெறிநோய் தினம் : தஞ்சையில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்
இன்று உலக வெறிநோய் தினத்தை ஒட்டி தஞ்சாவூர் மாநகராட்சி வடக்கு வாசல் ராஜா கோரி பகுதியில் வெறி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாநகர் நல அலுவலர் மருத்துவர் நமச்சிவாயம், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் மருத்துவர் பாஸ்கரன், உதவி இயக்குனர் மருத்துவர் சரவணன், மருத்துவர் ஏஞ்சலா சொர்ணமதி, பிராணிகள் வகை தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார், மருத்துவர் ஜனனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.