அருப்புக்கோட்டை: சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
அருப்புக்கோட்டையில் இன்று முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக இந்தியா கூட்டணி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். அவர்கள் சொக்கலிங்கபுரம், தட்சிணாமூர்த்தி கோவில், மரக்கடை பேருந்து நிறுத்தம், திருச்சுழி ரோடு, பூக்கடை பஜார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.