ஸ்ரீவைகுண்டம்: வல்லநாட்டில் இளைஞர்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கிராமத்தில் தொடர்ந்து இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யும் காவல்துறையை கண்டித்தும் வழக்கு போடும் இளைஞர்களின் கை, கால்களை உடைப்பதுமான குற்றச்சாட்டுகளை வைத்து இன்று ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து இன்று ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.