போச்சம்பள்ளி: அருகே வடமலைப்பட்டி பகுதியில் அறுபட்ட மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி பெண் படுகாயம்
போச்சம்பள்ளி அருகே அறுபட்ட மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி பெண் படுகாயம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வடமலைப்பட்டி பகுதியில் மரக்கட்டைகளை ஏற்றி சென்ற லாரி மின் கம்பி மீது உரசியதில் மின் கம்பி அறுபட்டு கீழே விழுந்தது அப்போது பின்னே வந்த மத்தூர் பகுதியை சேர்ந்த அன்பரசன் மற்றும் அவரது மனைவி விஜி (28) ஆகிய இருவர் மீது மின் கம்பி விழுந்ததில் அன்பரசனின் மனைவி விஜி படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்