தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தற்போது அமலில் உள்ளது, இதில் பாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்படும். இந்தத் திட்டம் மது பாட்டில்கள் சாலைகளில் சிதறிக் கிடப்பதைத் தடுக்கவும், கால்நடைகளுக்கு ஏற்படும் காயங்களைத் தவிர்க்கவும் தொடங்கப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன். அரசு அறிவித்துள்ள காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் உத்தரவு தனக்கு கிடைத்த வெற்றி என கூறி, அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கேக் மற்றும் கழுத்தில் ரோஜாப்பூ மாலை அணிந்து விழிப்புணர்வு வாகனத்துடன் வந்தார்.