முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்று மாநில அளவில் 6வது இடம் பிடித்துள்ளனர். தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத்தை நேரில் சந்தித்த மாணவ மாணவிகள் பதக்கங்களை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.