அருப்புக்கோட்டை: "ஏழைகளுக்கு எதிராகவே நடந்தது தான் மோடியின் ஆட்சி" - புதிய பேருந்து நிலையம் எதிரே திமுக MP திருச்சி சிவா பேச்சு
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து நேற்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "ஏழைகளுக்கு எதிராகவே நடந்ததுதான் மோடியின் ஆட்சி. பணக்காரர்கள் வாங்கிய ₹10,000 கோடி கடனை தள்ளுபடி செய்தவர்தான் மோடி" என குற்றம் சாட்டி பேசினார்.