தூத்துக்குடி: வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
கடந்த 20.10.2025 அன்று வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர்களான ஹரிகரன் மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.