காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் மார்கழி மாதம் தொடங்கியதை முன்னிட்டு வீட்டு வாசலில் மாவுக்கோலமிட்டு பூசணிப்பூ வைத்து விளக்கேற்றி வரவேற்ற கோவில் நகரப்பெண்கள்
மாதத்தில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கிருஷ்ண பகவான் கூறியதைப் போல இறைவனின் வழிபாட்டுக்கு உகந்த மாதமான மார்கழி மாதம் இன்று முதல் தொடங்கியது. மார்கழி மாதம் தொடங்கியதையொட்டி கோவில் நகரமான காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெண்கள் பழமையை மறக்காமல் அதிகாலையிலேயே எழுந்து தங்கள் வீட்டு வாசல்களில் வண்ண வண்ண மாவு கோலங்கள் போட்டு, பூசணிப்பூ வைத்து, வீடுகளின் வாசல்கள் தோறும் விளக்கேற்றி வைத்து மார்கழி மாதத்தை மகிழ்ச்சியுடன் வ