வேடசந்தூர் தாலுகா வடமதுரை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையன் முன்னிலையில் தென்னம்பட்டி ஊராட்சி திமுக ஊராட்சி செயலாளர் ரங்கராஜ் ஏற்பாட்டில் மாற்று கட்சியை சேர்ந்த வேலாயி, காயத்ரி, குணா, பழனிச்சாமி உள்பட ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 20 நபர்கள் திமுகவில் இணைந்தனர். வட மதுரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அய்யலூர் கருப்பன், நெசவாளர் அணி சொக்கலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.