மயிலாடுதுறை: சாரதா நகர் பகுதியில் பேராசிரியர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 20 லட்சம் மதிப்பிலான 20 சவரன் தங்கம் ஒரு கிலோ வெள்ளி கொள்ளை
மயிலாடுதுறை டவுன்ஸ்டேஷன் ரோடு சாரதா நகர் 2-வது தெருவில் மணிகண்டன்-விஜயா தம்பதி வசித்து வருகின்றனர். இருவரும் கல்லூரி பேராசிரியர்கள். இவர்கள் நேற்று திருச்சிக்கு சென்றிருந்த நிலையில், அருகாமையில் வசித்துவரும் மணிகண்டனின் தந்தை ஹரிஹரன், இன்று மணிகண்டன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, விரைந்துவந்த போலீசார் மணிகண்டனின் வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில்