பூதலூர்: ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் பூதலூர் ஒன்றியம் புதுப்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டபட்டு வரும் வீட்டினையும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஊரக வீடுகள் சீர் அமைத்தல் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்