வேடசந்தூர் அருகே சுள்ளெறும்பு நால்ரோடு பகுதியில் தோட்டத்தில் வீடு கட்டி விவசாயம் செய்து வருபவர் தர்மராஜ். இவரது தோட்டத்தில் உள்ள மின் கம்பம் தானாக சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின் கம்பிகள் உரசும் ஆபத்தான நிலையில் தொங்கிய நிலையில் உள்ளது. தோட்டத்தில் வேலை பார்ப்பதற்காக சென்றாலும், கால்நடைகள் அவ்வழியாகச் சென்றாலும் மின்கம்பி உரசி ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து கொண்ட சமுத்திரம் பட்டி மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாய குடும்பத்தினர் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.