திருப்புவனம்: திருப்புவனத்தில் செல்போன் பயன்பாட்டிற்கு எதிராகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் மாரத்தான்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் செல்போன் அதிகப்படியான பயன்பாட்டின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை வலியுறுத்தவும் ‘வங்கத்தான்’ என்ற பெயரில் மாரத்தான் போட்டி இன்று திருப்புவனத்தில் நடத்தப்பட்டது. நாட்டில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை செல்போன் இல்லாமல் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.