அருப்புக்கோட்டை: "100 நாள் வேலை ஊதியம் ₹400 ஆக வழங்கப்படும்" என கூறி கஞ்சநாயக்கன்பட்டியில் அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் வாக்கு சேகரிப்பு
அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளான கஞ்சநாயக்கன்பட்டி, காந்திநகர், ஆத்திபட்டி, ராஜீவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் மில் பணியாளர்கள், பெண்கள், விவசாய பெருமக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கூறி வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை 150 நாட்களாக உயர்த்தப்படும் என கூறினார்.