மானாமதுரை: சிப்காட்டில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்த்து தெரிவித்து கடையடைப்பு போராட்டம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டையை சுற்றி சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் அரசு மேல்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், சிப்காட் வளாகத்தில் " மெடிகேர் என்விரான்மென்டல் பிரைவேட் லிமிட்டெட்" என்ற நிறுவனம் மருத்துவ உயிரி கழிவு சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.