தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் கடந்த சில நாள்களாக கொசு தொல்லை அதிகரித்துள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், மாநகராட்சி பகுதியில் கொசு மருந்து தெளிப்பு பணியை பழைய நகராட்சி அலுவலகம் முன்பாக மாநகராட்சி ஆணையர் பிரியங்கா துவக்கி வைத்தார்.