காரைக்குடி: வடமாநில வியாபாரியை தாக்கிஆவடைபொய்கைதேசிய நெடுஞ்சாலை ஓரத்தில்
செல்போன், ஹெட்போன் பறிப்பு – 4 பேர் கைது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆவடைபொய்கை, திருச்சி–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தள்ளுவண்டியில் ஜூஸ் கடை நடத்தி வந்தவர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சுரஜ் பர்கவ் (20). இவர் கடைக்கு ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த நால்வர் ஜூஸ் குடித்துள்ளனர். அதற்கான பணத்தை கேட்ட சுரஜை அவர்கள் தாக்கியதுடன், அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ப்ளூடூத் ஹெட்போனையும் பறித்து சென்றனர்.