தஞ்சாவூர்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற நெடுந்தூர ஓட்டம் : தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இருந்து தொடக்கம்
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இருந்து மராத்தன் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு உற்சாகமாக நெடுந்தூர ஓட்டம் மேற்கொண்டனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அதற்குரிய பரிசு பணம் அவரவர் வங்கியில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.