திருப்புவனம்: பாப்பாவலசை பகுதியில் கஞ்சா வைத்திருந்த இருவர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் பூவந்தி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் வாசிவம், பாப்பாவலசை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மடப்புரம் பகுதியைச் சேர்ந்த கவுதம் மற்றும் சித்தபடபூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் பெகரா ஆகிய இருவரும் விற்பனைக்காக 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.