திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே செங்கட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிய இடைநிலை ஆசிரியரை இடமாற்றம் செய்ததை திரும்பப் பெற வலியுறுத்தி அரையாண்டு தேர்வை புறக்கணித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்விடத்திற்கு கல்வி அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பட்டிவீரன்பட்டி போலீசார் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.