தருமபுரி: தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி தருமபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம்.
தமிழ்நாடு மின் வாரியத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி ஐ டி யு) சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை 5 மணி அளவில் தருமபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.