சிவகங்கை: மாவட்ட மருத்துவக்கிடங்கு அருகே கால்வாயில் மாத்திரைகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு
சிவகங்கை, பனங்காடி சாலையில் செயல்பட்டு வரும் மாவட்ட மருத்துவக்கிடங்கு அருகிலுள்ள கால்வாயில் ஏராளமான மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் பயன்படுத்தாத மாத்திரைகள் மற்றும் மருந்துகள் முறையாக மருத்துவக் கழிவுகளோடு சேகரித்து அழிக்கப்பட வேண்டும். இதற்காக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கழிவுகள் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி சுத்திகரிப்பு ஆலையில் கொண்டு சென்று அழிக்கப்பட வேண்டும்.