பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 3 ஆயிரம் ரூபாய் பணம், பொங்கல் பொருட்கள், கரும்பு ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டது. இதனை அடுத்து வேடசந்தூரில் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் டோக்கன் வழங்கும் பணியை தொடங்கினர். பொதுமக்கள் ஆர்வம் மிகுதியால் தங்களுக்கு டோக்கன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஆர்வத்தில் தாங்களே ரேஷன் கடையை தேடி வந்து டோக்கன்களை கேட்டு வாங்கி சென்றனர்.