இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை இயக்கத்தின் சார்பில் மாநில குழு கூட்டம் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. பழனி மலை அடிவாரம் அருகில் உள்ள கார்த்திக் மகாலில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சுரங்கங்கள் அமைத்து மலைப்பகுதி, மண், மக்களை அளிக்கக்கூடாது என்றும், விவசாய தொழிலாளர்களின் விரோத வி பி ஜி ராம்ஜி சட்டத்தை எதிர்ப்போம் என்றும், தொழிலாளர் விரோத நான்கு வகை சட்டத்தை எதிர்ப்போம் என்றும் ஒரு கோடி தமிழர்களின் வாக்குரிமையை பறிக்கும் எஸ் ஐ ஆர் ஐ எதிர்ப்போம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.