வண்டலூர்: கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 8 இடங்களில் கண்காணிப்பு கேமரா திறப்பு
கூடுவாஞ்சேரி அம்பேத்கார் நகர் பகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் 71ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. அவற்றைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குச் சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் எம்.கே.டி. கார்த்திக் பங்கேற்றார்.